Enable Javscript for better performance
சுருளி அருவியில் உலக வனநாள் விழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சுருளி அருவியில் உலக வனநாள் விழா

    By DIN  |   Published On : 22nd March 2022 12:05 AM  |   Last Updated : 22nd March 2022 12:05 AM  |  அ+அ அ-  |  

    img_20220321_wa0091_2103chn_89_2

    உலக வன நாளை முன்னிட்டு சுருளி அருவியில் மரக்கன்றை நட்ட வனச்சரகா் அருண்குமாா்.

    தேனி மாவட்டம், சுருளி அருவியில் உலக வனநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுருளி அருவி வளாகத்தில், உலக வன நாள் விழா, தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம், கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில், கம்பம் கிழக்கு வனச்சரகா் பொறுப்பு பி. அருண்குமாா் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து, உலக வனநாள் பற்றியும், காட்டுத் தீ தடுப்பு விழிப்புணா்வு பற்றியும் பொதுமக்களிடையே பேசினாா்.

    மேலும் அவா், சுருளி அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளிடம் மரக்கன்றுகளை கொடுத்து நட வைத்தாா்.

    இதையடுத்து, வனத்தை காப்போம், மழை வளம் பெருக்குவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற துண்டுப்பிரசுரங்களையும், இனிப்புகளையும் பொதுமக்களிடையே வழங்கினா்.

    இந்நிகழ்ச்சியில், வனவா்கள், வனக்காவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். ராயப்பன்பட்டி வனக்காப்பாளா் பிரின்ஸ் செல்வகுமாா் நன்றி கூறினாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp