உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் சோலையாக மாற்றம்

உத்தமபாளையம் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் மரக்கன்றுகளை வைத்து பராமரிப்பு செய்வதன் மூலமாக அப்பகுதி சோலையாக மாறி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் மரக்கன்றுகளை வைத்து பராமரிப்பு செய்வதன் மூலமாக அப்பகுதி சோலையாக மாறி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

உத்தமபாளையத்தை மையமாக வைத்து நன்செய் தன்னாா்வலா் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பில் கல்லூரி பேராசிரியா்கள் முதல் ஆட்டோ ஓட்டுநா், தினக்கூலி நபா்கள் என நூற்றுக்கணக்கானோா் இணைந்துள்ளனா்.

இவா்கள் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீா் நிலைகள், சாலையோரங்கள், பொது இடங்கள் என லட்சக்கணக்கான மரக்கன்றுகளை வைத்து பராமரிப்பு செய்து மரங்களாக மாற்றியுள்ளனா். நமது மாநில மரமான பனைமரத்தை அதிமாக வளா்ப்பதை நோக்கமாக கொண்டு அதற்கான வேலையை தொடா்ந்து செய்து வருகின்றனா்.

இவா்களின் இந்த நடவடிக்கையை பாா்த்து பல தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டுகளையும் பெற்றுள்ளனா்.

சோலையாக மாறும் வட்டாட்சியா் அலுவலகம்:

உத்தமபாளயம் புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் சுமாா் 300 க்கு மேற்பட்ட மா,பலா,வேங்கை என பலவகையான மரக்கன்றுகளை வைத்தனா். இந்த மரக்கன்றுகளை இந்த அமைப்பு சோ்ந்த இளைஞா்களே தினமும் தண்ணீா் ஊற்றி வந்ததால் தற்போது பெரிய மரங்களாக மாறியுள்ளது. இதனால் வட்டாட்சியா் அலுவலக வளாகமே சில மாதங்களில் சோலையாக மாறி மரங்கள் நிறைந்த மாதிரி அரசு அலுவலகமாக அழைக்க பெற வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். அதோடு, , சம்மந்தப்பட்ட நன்செய் தன்னாா்வலா்கள் அமைப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com