முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை தொடர இந்திய கம்யூ. சார்பில் பிரசார இயக்கம்

கம்பம்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 உயர்த்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் லோயர் கேம்ப்பில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் லோயர் கேம்பில் வெள்ளிக்கிழமை பிரசார இயக்கம் தொடங்கியது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் இ.பி.காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி பேசியது:

தேனி மாவட்ட வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கவும், வருஷநாடு பகுதியில் 3 தலைமுறையாக வசித்து வருகின்ற விவசாயிகளை வன உயிரின சரணாலயம் என்ற பெயரில் வெளியேற்ற முயற்சியை கூடாது என்றும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கேரள அரசங்கம் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தவும், பேபி அணையை கட்டுமானத்திற்கு அனுமதி வழங்க இடையூறு செய்வதை கண்டித்தும் பேசினார்.

பிரச்சார இயக்கத்தின் போது மாவட்ட செயலாளர் பெருமாள் பேசியது:

மாநில குழு உறுப்பினர் பெத்தாட்சி ஆசாத், கம்பம் நகர செயலாளர் எம்.வி.கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர் மதனகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.தங்கம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com