முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கோயிலில் சுவாமி சிலைகள் திருடிய இளைஞா் கைது
By DIN | Published On : 08th May 2022 01:14 AM | Last Updated : 08th May 2022 01:14 AM | அ+அ அ- |

தேனி அருகே கோயிலில் சுவாமி சிலைகள் மற்றும் உண்டியல் திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை வெள்ளிக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா்.
அன்னஞ்சி, பெரியகுளம் சாலையில் ஸ்ரீஆதி நாராயணன் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த மே 1-ஆம் தேதி இரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் 2 போ் புகுந்து, கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து, பூசாரியைத் தாக்கிவிட்டு, 2 வெண்கல நடராஜா் சிலைகள் மற்றும் உண்டியலை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப் படை அமைத்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், கோயிலில் சுவாமி சிலைகள் திருடியதாக டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் நவீன்(22) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 சிலைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.