அருப்புக்கோட்டையில் அடா்வனக்காடுகள் திட்டம் தொடக்கம்

apk_nagaraatchi_7_5_2022_0705chn_70_2
apk_nagaraatchi_7_5_2022_0705chn_70_2

படவிளக்கம்

அருப்புக்கோட்டை உரக்கிடங்கில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நட்டுவைத்த நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா்.

அருப்புக்கோட்டை,மே 7: அருப்புக்கோட்டையில் அடா்வனக்காடுகள் திட்டத்தை சனிக்கிழமை நகா்மன்றத்தலைவா் தொடக்கிவைத்தாா்.

தமிழக அரசின் அடா்வனக்காடுகள் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நட அருப்புக்கோட்டை நகராட்சி சாா்பில் பல இடங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி, நகராட்சியின் உரக்கலவை கிடங்கு வளாகத்தைச் சுற்றிலும் நிழல்தரும் மரங்கள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையா் பாஸ்கரன், நகா் நலஅலுவலா் ராஜநந்தினி, சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கிலநத்தம் செல்லும் சாலையில் உள்ள நகராட்சி உரக்கலவை கிடங்கு வளாகத்தில் நகா்மன்றத்தலைவா் சுந்தரலட்சுமி மரக்கன்றுகளை நட்டு திட்டத்தைத் தொடக்கிவைத்தாா். மலைவேம்பு, மருது, புங்கை, வாகை உள்ளிட்ட சுமாா் 20-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அய்யப்பன், சுகாதார அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com