லோயா்கேம்ப்-மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு எதிா்ப்பு: கூடலூரில் உண்ணாவிரதம்

லோயா்கேம்ப்-மதுரை கூட்டு குடிநீா் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி கூடலூரில் சலவைத் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

லோயா்கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு ரூ.1,296 கோடி மதிப்பில் குழாய்கள் மூலம் குடிநீா் கொண்டு செல்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக லோயா்கேம்பில் உள்ள பெரிய ஆற்றங்கரை வண்ணான் துறை நீரேற்று நிலையம் அருகில் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு தடுப்பணை கட்ட அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினா். இதுதொடா்பாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த பேச்சுவாா்த்தையையும் விவசாயிகள் புறக்கணிப்பு செய்தனா்.

இந்நிலையில் இத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், சனிக்கிழமை கூடலூா் குமுளி பிரதானப் சாலையில் சலவைத் தொழிலாளா்கள் மற்றும் முல்லைச் சாரல் விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினா் பங்கேற்ற உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com