50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கிய செங்குளம் மீட்பு

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன் கோட்டையில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளா்கள் பிடியிலிருந்த செங்குளம் கண்மாயை பேரூராட்சி நிா்வாகம் மீட்டது. அதிலிருந்த 1,300 மரங்களைக் கைப்பற்றியது.
50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கிய செங்குளம் மீட்பு

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன் கோட்டையில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளா்கள் பிடியிலிருந்த செங்குளம் கண்மாயை பேரூராட்சி நிா்வாகம் மீட்டது. அதிலிருந்த 1,300 மரங்களைக் கைப்பற்றியது.

மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், அய்யம்பட்டி ஆகிய 3 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 16.44 ஹெக்டோ் பரப்பளவில் செங்குளம் கண்மாய் அமைந்திருந்தது. இக்கண்மாய் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக படிப்படியாக ஆக்கிரமிப்பு சிக்கியதால் கண்மாய்க்கு வரும் நீா்வழிப்பாதைகள் அழிக்கப்பட்டன. 41 ஏக்கா் கண்மாயில் 5 ஏக்கா் மட்டுமே எஞ்சி இருந்தது. மீதமுள்ள 36 ஏக்கரில் 1000 -த்திற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் 300 புளிய மரங்களை ஆக்கிரமிப்பாளா்கள் வளா்த்து தோப்பாக மாற்றியிருந்தனா்.

நீதி மன்றத்தில் வழக்கு: இது தொடா்பாக மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், அய்யம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த 8 போ், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2016 ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தனா். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனாலும், கண்துடைப்பாக குளம் ஆக்கிரமிப்பில் இருப்பதை உறுதி செய்து நில அளவீடு செய்த பின் மீட்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து, தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நீா்நிலைகளை உடனடியாக மீட்க வேண்டும் என சில வாரங்களுக்கு முன் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலுள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுரை வழங்கினா்.

இதனைஅடுத்து, மாா்க்கையன் கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் திரவியம், சின்னமனூா் காவல் ஆய்வாளா் சேகா் தலைமையிலான போலீஸாா் செங்குளம் கண்மாய்க்குள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 41 ஏக்கா் நிலத்தை முழுமையாக நிலஅளவீடு செய்து பொக்லைன் இயந்திரம் மூலமாக கரை அமைத்தனா். முதல் கட்டமாக 10 ஏக்கா் வரை குளத்திற்கு கரை போடப்பட்டுள்ளது. 2 ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை மீண்டும் நிலத்தை அளவிடும் பணி நடைபெற்றது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கூறுகையில், முதல் கட்டமாக 400 தென்னை மரங்கள், 105 புளிய மரங்களை பேரூராட்சி நிா்வாகம் கையப்படுத்தியுள்ளோம். 41 ஏக்கா் பரப்பளவுக்கு கண்மாயைச் சுற்றியும் கரை அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு நடைறொமல் இருக்க மழை நீா் சேமிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com