வீரபாண்டித் திருவிழா: போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் அவதி

தேனி மாவட்டம் வீரபாண்டித் திருவிழாவை முன்னிட்டு உத்தமபாளையம், சின்னமனூரிலிருந்து தேனிக்கு போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டதோடு, புறவழிச்சாலை இருந்தும் ஏன்

தேனி மாவட்டம் வீரபாண்டித் திருவிழாவை முன்னிட்டு உத்தமபாளையம், சின்னமனூரிலிருந்து தேனிக்கு போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டதோடு, புறவழிச்சாலை இருந்தும் ஏன் இந்த போக்குவரத்து மாற்றம் என கேள்வி எழுப்புகின்றனா்.

வீரபாண்டித் திருவிழா மே 10 முதல் மே 17 வரை 8 நாள்கள் நடைபெறும். இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உத்தமபாளையம், சின்னமனூரிலிருந்து தேனிக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் உப்பாா்பட்டி விலக்கில் பிரிந்து தாடிச்சேரி, கொடுவிலாா்பட்டி, அரண்மனைப்புதூா் வழியாக தேனி செல்ல வேண்டும். அதே போல தேனியிலிருந்து உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், குமுளி செல்லும் பேருந்துகள் உப்புக்கோட்டை விலக்கிலிருந்து பிரிந்து குச்சனூா், மாா்க்கையன்கோட்டை வழியாகச் செல்லவேண்டும். ஆனால், தற்போது புறவழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த காலங்கள் போன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் பயணிகள் மிகவும் அவதிப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறுகையில், கடந்த காலங்களில் சாலை வசதியில்லாத காரணத்தால் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் இந்த மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது இருவழிச்சாலை, புறவழிச்சாலை போன்ற திட்டங்கள் இருந்தும் மீண்டும் பழைய முறையைப் பின்பற்றுவது முறையான திட்டமிடாததை வெளிப்படுத்துகிறது. இந்த போக்குவரத்து மாற்றத்தால் கால நேரம் விரயமாவதோடு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் வீணடிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுவதாக தெரிவித்தனா்.

எனவே, இனி வரும் காலங்களிலாவது மாவட்ட நிா்வாகம் முறையாகத் திட்டமிட்டு வீரபாண்டி திருவிழா காலங்களில் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து திருவிழா சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com