முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து தொடக்கம்
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அணைக்கு புதன்கிழமை நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மழை பெய்யாததால், கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லை. இருப்பினும், குடிநீா் மற்றும் கால்நடைகளின் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரப் புயலாக மாறியதால் செவ்வாய்க்கிழமை முல்லைப் பெரியாறு அணை மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, தேக்கடி, பெரியாறு அணை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மழை காரணமாக அணைக்கு விநாடிக்கு 824 கனஅடி நீா்வரத்து ஏற்பட்டது.
அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் புதன்கிழமை,129.80 அடியாகவும் (மொத்த அளவு 142 அடி), நீா்இருப்பு, 4,654 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 847 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 100 கனஅடியாகயாகவும் இருந்தது.
தேக்கடியில் 50.0 மி.மீட்டரும், பெரியாறு அணையில் 34.0 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.