முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உத்தமபாளையம் அருகே துப்புரவுப் பணியாளா் தற்கொலை
By DIN | Published On : 13th May 2022 05:58 AM | Last Updated : 13th May 2022 05:58 AM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தில் வியாழக்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக, தற்காலிக துப்புரவுப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோகிலாபுரம் ஓடைத் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் முருகன் (40). இவா், ஆணைமலையன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். முருகன் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதால், அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
அதேபோல், வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த முருகன், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து அவரது உறவினா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.