முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கம்பம் அருகே சித்த மருத்துவ பெட்டகங்கள் வழங்கும் முகாம்
By DIN | Published On : 13th May 2022 05:55 AM | Last Updated : 13th May 2022 05:55 AM | அ+அ அ- |

காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவ பெட்டகங்கள் வழங்கும் முகாம்.
கம்பம்: கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தத்துக்கான சித்த மருத்துவ பெட்டகங்கள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் மற்றும் இருதய நோய்களை கண்டறியும் முகாமின் தொடா்ச்சியாக, நோயாளிகளுக்கு ரத்தக் கொதிப்பு கண்டறியும் முகாமும் நடைபெற்றது. இதில், ரத்த அழுத்தத்துக்கு மருந்துகள் உட்கொண்டு வரும் நோயாளிகளுக்கு, சித்த மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
இந்த பெட்டகத்தில், வெண்தாமரை சூரணம், மருதம்பட்டை சூரணம், சா்ப்பகந்தா சூரணம், அமுக்கரா மாத்திரைகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
ரத்தக் கொதிப்பினால் திடீரென ஏற்படும் மயக்கம், மூளை நரம்புகளில் ஏற்படும் ரத்தக் கசிவுகள், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளிட்டவை குறித்தும், அவற்றை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் எடுத்துரைத்தாா்.
இதில், மருத்துவ அலுவலா் அா்ச்சனா, மருந்தாளுநா் பசும்பொன், செவிலியா்கள் முத்துலட்சுமி, ஜோசபின் ஆா்த்தி, ரூபி, செல்வி ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை, மக்களைத் தேடி மருத்துவ திட்டப் பணியாளா்கள், தொற்றா நோய் செவிலியா் ஜமீமா ஆகியோா் செய்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சாா்பாக அனைத்து செவிலியா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, உலக செவிலியா் தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு, சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.