முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளம் அருகே சேதமடைந்துள்ள தரைமட்ட பாலத்தால் விபத்து அபாயம்
By DIN | Published On : 13th May 2022 05:46 AM | Last Updated : 13th May 2022 05:46 AM | அ+அ அ- |

தென்கரை பேரூராட்சி டி.கள்ளிப்பட்டி சூளைத் தெருவில் சேதமடைந்துள்ள தரைமட்ட பாலம்.
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி டி.கள்ளிப்பட்டியில் சேதமடைந்துள்ள தரைமட்ட பாலத்தால் விபத்து அபாயம் நிலவுவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை பேரூராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இங்கு, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி அருகே மண்பாண்டம் செய்யும் சூளை உள்ளது. இத்தெருவுக்குச் செல்லும் சாலையில் உள்ள தரைமட்டப் பாலம் கட்டப்பட்டு 10 ஆண்டுக்கும் மேலாகிறது.
இந்நிலையில், இப்பாலம் இடிந்து விழுந்து ஓராண்டுக்கும் மேலாக சேதமடைந்த நிலையிலேயே உள்ளது. இந்த பாலம் வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வது அபாயகரமாக உள்ளது. எனவே, இப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.