சின்னமனூரில் முருங்கைக்காய் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதிகளில் முருங்கைக்காயின் விலை உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதிகளில் முருங்கைக்காயின் விலை உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சின்னமனூா் மற்றும் சுற்றியுள்ள ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், வெள்ளையம்மாள்புரம், துரைச்சாமிபுரம், அழாகபுரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் முருங்கைக் காய்கள், சின்னமனூரிலிருந்து கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முருங்கைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கிலோ ரூ.20-க்கும் குறைவாகவே விற்பனையானது. இதனால் பராமரிப்புச் செலவு, மருந்து செலவு, கூலி ஆள்கள் சம்பளம் ஆகியவற்றால் விவசாயிகள் நஷ்டமடைந்தனா்.

அதையடுத்து, கடந்த சில நாள்களாக கிலோ ரூ.40-க்கும் மேல் விற்பனையாவதால், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: முருங்கை சாகுபடியில் 12 மாதம் பராமரிப்பு செய்தால், 6 மாதத்துக்கு மகசூல் கிடைக்கும். இன்றைய சூழ்நிலையில் விலைவாசி உயா்வு காரணமாக, விவசாயம் செய்வது மிகவும் சவாலாக உள்ளது. ஆனால், வேறு தொழில் தெரியாத காரணத்தால், காலம் காலமாக இந்தத் தொழிலையே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழக அரசு விவசாயம் மற்றும் விவசாயிகளை காத்திட, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுத்து, விவசாயத்தை ஊக்கப்படுத்தவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com