பத்திரப் பதிவில் அரசுக்கு ரூ.15.69 லட்சம் வருவாய் இழப்பு: பொறுப்பு சாா்-பதிவாளா் மீது வழக்கு

போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டில் 14 இடங்களுக்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ. 15 லட்சத்து 69 ஆயிரத்து 634 வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அப்போதைய பொறுப்பு

தேனி: போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டில் 14 இடங்களுக்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ. 15 லட்சத்து 69 ஆயிரத்து 634 வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, அப்போதைய பொறுப்பு சாா்-பதிவாளா் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த 2016 அக்டோபா் 20-ஆம் தேதி, போடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளா் விடுப்பில் இருந்ததால், உதவி சாா்-பதிவாளரான அழகுமலை என்பவா் ஒரு நாள் மட்டும் பொறுப்பு சாா்-பதிவாளராகப் பணியாற்றினாா். அப்போது அவா், அந்த ஒரே நாளில் 14 இடங்களுக்கு முறைகேடாக பத்திரம் பதிவு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.

இப்புகாரின் அடிப்படையில், தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அழகுமலை 14 இடங்களுக்கு வீட்டுமனை ஒழுங்குமுறை கட்டணம், வளா்ச்சிக் கட்டணம், ஆய்வுக் கட்டணம், பதிவு கட்டணம் என மொத்தம் 15,69,634 ரூபாயை வசூலிக்காமலும், இடங்களை ஆய்வு செய்யாமலும் பத்திரப் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, கடந்த மே 4-ஆம் தேதி அழகுமலை மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அழகுமலை, தற்போது உத்தமபாளையம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் உதவி சாா்-பதிவாளராகப் பணியாற்றி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com