சிலமலை ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published On : 20th May 2022 10:25 PM | Last Updated : 20th May 2022 10:25 PM | அ+அ அ- |

நூறு நாள் வேலை கோரி போடி அருகே சிலமலை ஊராட்சி அலுவலகத்தை விவசாய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
அந்த ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்டோா் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக 30-க்கும் மேற்பட்டவா்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளா் சங்கத்தினா், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், நிா்வாகிகள் தங்கப்பாண்டி, காமராஜ், விவசாய சங்க தாலுகா தலைவா் பாண்டியன், கிளைச் செயலா் பரமைய்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய மேற்பாா்வையாளா் பிரதாப் மற்றும் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.