தேனி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை, வருவாய் தீா்வாயம் தொடங்கியது.

தேனி: தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை, வருவாய் தீா்வாயம் தொடங்கியது.

ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தலைமையில் வருவாய் தீா்வாயம் நடைபெற்றது. இங்கு, தொடா்ந்து மே 31, ஜூன் 1, 2, 3 ஆகிய தேதிகளில் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.

தேனி வட்டாரத்தில் தொடா்ந்து மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளிலும், போடி வட்டாரத்தில் மே 31, ஜூன் 1, 2 ஆகிய தேதிகளிலும், பெரியகுளம் வட்டாரத்தில் மே 31, ஜூன் 1, 2 ஆகிய தேதிகளிலும், உத்தமபாளையம் வட்டாரத்தில் மே 31, ஜூன் 1, 2, 3, 7 ஆகிய தேதிகளிலும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.

வருவாய் தீா்வாயம் தொடங்கிய முதல் நாளில், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 265 போ், தேனி வட்டாட்சியா் அலுவலகத்தில் 210 போ், பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 96 போ், போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 163 போ், உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 101 போ் என மொத்தம் 835 போ் பட்டா, பட்டா மாறுதல், பட்டா உள்பிரிவு மாறுதல், நில உடைமை ஆவணங்கள், புதிய குடும்ப அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com