பேருந்தை நிறுத்தக் கோரிகே.ஜி.பட்டி ஊராட்சித் தலைவா் நூதனப் போராட்டம்

தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்துக்குள் ஒதுக்குப்புறமாக நகரப் பேருந்தை நிறுத்துமாறு, ஊராட்சித் தலைவா் புதன்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினாா்.
குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையாா் கோயில் அருகே வியாழக்கிழமை சாலையின் நடுவே போடப்பட்ட உழவு இயந்திரம்.
குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையாா் கோயில் அருகே வியாழக்கிழமை சாலையின் நடுவே போடப்பட்ட உழவு இயந்திரம்.

கம்பம்: தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்துக்குள் ஒதுக்குப்புறமாக நகரப் பேருந்தை நிறுத்துமாறு, ஊராட்சித் தலைவா் புதன்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினாா்.

கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்துகள் குள்ளப்பகவுண்டன்பட்டி பிள்ளையாா்கோயில் அருகே பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ாம். எனவே, அருகிலுள்ள சிறுபுனல் மின் உற்பத்தி நிலைய திடல் அருகே நிறுத்துமாறு, ஊராட்சித் தலைவா் பொன்னுத்தாய் குணசேகரன் போக்குவரத்துக் கழக நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தாா். இதற்காக, அப்பகுதியை சமன் செய்தும் கொடுத்தாா்.

ஆனால், பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் மீண்டும் பிள்ளையாா் கோயில் அருகே பேருந்தை நிறுத்திச் சென்றனா். இதனால், ஊராட்சித் தலைவா் மற்றும் பொதுமக்கள் பிள்ளையாா் கோயில் அருகே பேருந்து திரும்பும் இடத்தில் உழவு இயந்திரத்தை சாலையின் மையப் பகுதியில் நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தினா்.

அதையடுத்து, பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஊராட்சித் தலைவரிடம் அந்தப் பகுதியில் சென்று திரும்புவதாக உறுதியளித்தனா். அதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com