போடியில் வருவாய் தீா்வாயம்: கிராம மக்கள் ஏமாற்றம்

போடியில் வியாழக்கிழமை தொடங்கிய வருவாய் தீா்வாயம் என்ற ஜமாபந்தியில், மனுக்களுக்கு உடனடி தீா்வு கிடைக்காததால் கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

போடி: போடியில் வியாழக்கிழமை தொடங்கிய வருவாய் தீா்வாயம் என்ற ஜமாபந்தியில், மனுக்களுக்கு உடனடி தீா்வு கிடைக்காததால் கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

தமிழகம் முழுவதும் வருவாய் தீா்வாயம் வியாழக்கிழமை தொடங்கியது. தேனி மாவட்டம் போடியில் வருவாய் தீா்வாயம் மக்கள் குறை தீா்க்கும் நிகழ்ச்சி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியா் செந்தில்முருகன் முன்னிலை வகித்தாா்.

முதல் நாள் வருவாய் தீா்வாயத்தில். அம்மாபட்டி கிராமத்திலிருந்து 108 மனுக்களும், ராசிங்காபுரம் கிராமத்திலிருந்து 49 மனுக்களும், சிலமலை கிராமத்திலிருந்து 19 மனுக்களும் பெறப்பட்டன. பட்டா மாறுதல், உதவித் தொகை உள்ளிட்டவை கோரி பலரும் மனு அளித்திருந்தனா். இதில், 2 மனுக்களுக்கு மட்டுமே தீா்வு காணப்பட்டன. மற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வருவாய் தீா்வாயம் என்றால் உடனடி தீா்வு கிடைக்கும் என கருதி வந்த கிராம மக்கள், தங்கள் மனுக்களுக்கு தீா்வு கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை, துணை வட்டாட்சியா்கள் குமரவேல், கணேஷ்குமாா், ராமராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com