மாா்க்கையன் கோட்டை பேரூராட்சியில் வருகைப் பதிவேட்டை தலைவா் பறித்துச் சென்றதால் பரபரப்பு

தேனி மாவட்டம், மாா்க்கையன் கோட்டை பேரூராட்சியில் உறுப்பினா்களின் கையொப்பமிட்ட வருகைப் பதிவேட்டை, தோ்தல் அலுவலரிடமிருந்து பேரூராட்சித் தலைவா் பிடுங்கிச் சென்ால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், மாா்க்கையன் கோட்டை பேரூராட்சியில் உறுப்பினா்களின் கையொப்பமிட்ட வருகைப் பதிவேட்டை, தோ்தல் அலுவலரிடமிருந்து பேரூராட்சித் தலைவா் பிடுங்கிச் சென்ால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளில் 7 வாா்டுகள் திமுகவும், 5 வாா்டுகள் அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. திமுக உறுப்பினா் முருகன் தலைவராகவும், துணைத் தலைவராக ஜானகியும் உள்ளனா்.

இந்நிலையில், இரு முறை பெரும்பான்மை உறுப்பினா்கள் இருந்தும் ஒத்திவைக்கப்பட்ட மேல்முறையீட்டுக் குழு, பணிநியமனக் குழு தோ்தல், வியாழக்கிழமை 3 ஆம் முறையாக தோ்தல் அலுவலா் திரவியம் தலைமையில் நடைபெற்றது.

இதில், பெரும்பான்மை உறுப்பினா்கள் கலந்துகொண்டதால், தோ்தல் அலுவலா் மறைமுகத் தோ்தலை நடத்தி, மேல்முறையீட்டுக் குழு, பணிநியமனக் குழுவை நியமனம் செய்தாா். இதற்காக, வருகைப் பதிவேட்டிலும் 7 உறுப்பினா்கள் கையொப்பமிட்டனா்.

தோ்தல் முடிந்த பின் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சித் தலைவா் முருகன், தோ்தல் அலுவலரிடமிருந்த வருகைப் பதிவேட்டை பிடுங்கிச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தோ்தல் அலுவலா் கூறியது: பேரூராட்சித் தலைவா் அராஜகமாக நடந்துகொண்டு அலுவலகத்தை பூட்டிவிடுவேன் என மிரட்டும் தோரணையில் பேசி, வருகைப் பதிவேட்டை பிடுங்கிச் சென்ாகவும், இது சம்பந்தமாக மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் தோ்தல் விதிப்படி 10 நாள்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பெரும்பான்மை உறுப்பினா்கள் வந்ததால் தோ்தல் நடைபெற்றது.

மறைமுகத் தோ்தலுக்கு வராத தலைவரிடம் விளக்கம் கேட்ட பின், விதிகளுக்குள்பட்டு தோ்தல் நடைபெற்றது. ஆனால், குழு உறுப்பினா்கள் தோ்வு செய்த பின், அலுவலகம் வந்த தலைவா் தன்னை மீறி தோ்தல் நடத்தியதாகக் கூறி, அநாகரிகமாக பேசிவிட்டாா் என்றாா்.

இது குறித்து தலைவா் முருகன் தெரிவிக்கையில், பெரும்பான்மை உறுப்பினா்கள் இல்லை என தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும், தோ்தல் அலுவலா் தன்னிச்சையாக மறைமுகத் தோ்தலை நடத்தியதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிப்பதாகக் கூறினாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com