தொட்டி பாலம் சேதம்: சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் தண்ணீா் குறைப்பு

தொட்டிப்பாலம் சேதமடைந்ததால், சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு பாதியாக வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.
சேதமடைந்த தொட்டிப் பாலத்திலிருந்து வெளியேறிய தண்ணீா்.
சேதமடைந்த தொட்டிப் பாலத்திலிருந்து வெளியேறிய தண்ணீா்.

தொட்டிப்பாலம் சேதமடைந்ததால், சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு பாதியாக வெள்ளிக்கிழமை குறைக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் உள்ள சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 14.47 கன அடி வீதம் தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீா், மதகுப் பகுதியிலிருந்து வெளியேறி சுமாா் 1 கி.மீ.-க்கு தொட்டிப்பாலம் வழியாகச் செல்லும். அதன் பின்னா், ராயப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும்.

இந்த நிலையில், இந்தப் பாலத்தின் கீழ் பகுதியில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீா் வெளியேறி வீணானது. இதனால், தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. பின்னா், உத்தமபாளையம் பொதுப்பணித் துறையினா் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 7 கன அடி வீதம் பாதியாகக் குறைக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து கிராமங்களுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பாசன நீா் கிடைக்காமல் பல கிராமத்தினா் ஏமாற்றம் அடைகின்றனா். எனவே, 18 கிலோ மீட்டா் கால்வாய் பணிகளை முழுமையாக சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com