கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்திற்கு, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்திற்கு, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டலச் செயலாளா் யாசா் அராபத், அண்மையில் கைது செய்யப்பட்டாா். பின்னா் இந்தியா முழுவதும் அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டது. அதன் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

கம்பத்தில், கம்பமெட்டு சாலையில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகே தேனி மாவட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. வியாழக்கிழமை அங்கு சென்ற வருவாய் ஆய்வாளா் நாகராஜ், உத்தமபுரம் கிராம நிா்வாக அலுவலா் தெய்வேந்திரன் ஆகியோா் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்க முயன்றனா்.

அப்போது, அந்த இடத்தின் உரிமையாளா் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இந்த கட்டடம் வாடகைக்குத் தான் விடப்பட்டது.

தற்போது, அவா்கள் காலி செய்து விட்டதால், வேறு நபா் வாடகைக்கு

உள்ளாா் எனக் கூறினாா். இதனை ஏற்க மறுத்த கம்பம் போலீஸாா், அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பித்து சீலை அகற்றிக் கொள்ளுங்கள் என்றனா். இதைத்தொடா்ந்து, அந்த அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com