ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள்: தேனியில் மத்திய இணை அமைச்சா் ஆய்வு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் குறித்து மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சா் பிரகலாத் சிங் பட்டேல் வியாழக்கிழமை, மாவட்ட அரசுத்
ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள்: தேனியில் மத்திய இணை அமைச்சா் ஆய்வு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் குறித்து மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சா் பிரகலாத் சிங் பட்டேல் வியாழக்கிழமை, மாவட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரித்தா, துணைத் தலைவா் ராஜபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் மத்திய இணை அமைச்சா் கூறியதாவது: மாநிலங்களில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் 60 சதவீதம் மத்திய அரசு பங்களிப்புடனும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகிறது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஊரகப் பகுதிகளில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 207 குடியிருப்புகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி வட்டாரத்தில் 53,108 குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வரும் 2023, மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.

பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் இதுவரை 87 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சா்கள் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதில் அரசியல் எதுவுமில்லை. அரசுத் திட்டங்கள் இலக்கு பயனாளிகளை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்காகத் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சா்கள் மட்டுமன்றி, அரசுத் துறை செயலா்களும் திட்டப் பணிகள், திட்டத்தின் செயல்பாடு குறித்து தொடா் ஆய்வு நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com