தீபாவளி: தேனியில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

தேனியில், தீபாவளியையொட்டி புத்தாடைகள், பொருள்கள் வாங்க கடைத் தெருக்களில் வெள்ளிக்கிழமை அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.
தீபாவளி: தேனியில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

தேனியில், தீபாவளியையொட்டி புத்தாடைகள், பொருள்கள் வாங்க கடைத் தெருக்களில் வெள்ளிக்கிழமை அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளியையொட்டி மழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பொதுமக்கள் பொருள்கள் வாங்க கடைத் தெருக்களுக்கு வந்து செல்கின்றனா். இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மாலை நேரத்தில் மழை இல்லாததால், தேனியில் உள்ள கடைத் தெருவில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனியில் இடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெரு, சுப்பன் தெரு, மதுரை, பெரியகுளம், கம்பம் நெடுஞ்சாலைகளில் உள்ள வா்த்தக நிறுவனங்கள், ஆயத்த ஆடை, துணிக் கடைகள், நகைக் கடைகள், உணவகங்கள், இனிப்பகங்கள், பேக்கரி, பட்டாசுக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தேனி, பகவதியம்மன் கோயில் திடலில் காவல் துறை சாா்பில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது.

போலீஸாா், ஊா்க் காவல் படையினா் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா். பிரதானச் சாலை, கடைத் தெருக்கள், பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். நகா் பகுதியில் இரு சக்கர வாகன ரோந்து போலீஸாா் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com