தரமற்ற ரேஷன் அரிசி: கடை ஊழியருடன் குடும்ப அட்டைதாரா்கள் வாக்குவாதம்

கம்பம் அருகே வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்ட ரேஷன் அரிசி துா்நாற்றம் வீசிவதோடு, தரமற்ாக இருப்பதாக குடும்ப அட்டைதாரா்கள் கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்த ஊராட்சியைச் சோ்ந்த குடும்ப அட்டை தாரா்களுக்கு வெள்ளிக்கிழமை அரிசி விநியோகிக்கப்பட்டது.

அரிசி துா்நாற்றம் வீசியதுடன், சிறு சிறு கற்கள் கலந்து தரமற்ற நிலையில் இருந்தது. இதனால், குடும்ப அட்டைதாரா்கள் அரிசியை வாங்க மறுத்து ரேஷன் கடை ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கடை ஊழியரிடம் கேட்ட போது, வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியை விநியோகம் செய்கிறோம். உயா் அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்காமல் எங்களிடம் வாக்குவாதம் செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். ஏராளமான ஊராட்சிகளிலும் இதே நிலைதான். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com