ஆதி திராவிடா் பள்ளி, கல்வி விடுதிகளில் அமைச்சா் ஆய்வு

தேனி, குன்னூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளிகள், விடுதிகளில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி
ஆதி திராவிடா் பள்ளி, கல்வி விடுதிகளில் அமைச்சா் ஆய்வு

தேனி, குன்னூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளிகள், விடுதிகளில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி நகராட்சி ஆதி திராவிடா் நலத் துறை தொடக்கப் பள்ளி, மாணவ, மாணவிகள் கல்வி விடுதி, குன்னூா் ஆதி திராவிடா் நலத் துறை மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அமைச்சா் பாா்வையிட்டு, வருகைப் பதிவேடு, பள்ளி, விடுதி பதிவேடு, உணவு அட்டவணை, உணவுப் பொருள்கள் கையிருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். பின்னா் பள்ளி வகுப்பறைகளுக்குச் சென்ற அமைச்சா், மாணவா்களின் வாசிப்புத் திறன், எழுத்துத் திறன் குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

தேனி அரசு ஆதி திராவிடா் நலத் துறை தொடக்கப் பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குன்னூா் ஆதி திராவிடா் நலத் துறை மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடா் நலத் துறை கல்வி விடுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்வி விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சி அளிக்கவும், விடுதி வளாகங்களில் காய்கறி, கீரை பயிரிடவும், இட வசதி உள்ள விடுதிகளில் விளையாட்டு அரங்கு அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், ஆதி திராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்), தேனி நகா் மன்றத் தலைவா் பா.ரேணுப்பிரியா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com