லோயா் கேம்ப்-குமுளி மலைச்சாலையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்- குமுளி மலைச்சாலையில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
லோயா் கேம்ப்-குமுளி மலைச்சாலையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்- குமுளி மலைச்சாலையில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், மீட்புப்பணியில் ஈடுபட, தமிழக அரசு பேரிடா் மேலாண்மைக் குழுவை தயாா் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக- கேரள எல்லையை இணைக்கும் லோயா் கேம்ப்- குமுளி மலைச்சாலையில் வாகன விபத்து, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டால் விரைந்து மீட்பது எப்படி என்று போலீஸாா், தீயணைப்பு, வருவாய், வனம், நகராட்சி, மருத்துவக்குழுவினா் இணைந்து வியாழக்கிழமை ஒத்திகைப் பணியில் ஈடுபட்டனா். உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் கௌசல்யா, வட்டார மருத்துவ அலுவலா் பி.முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com