உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் விநாயகா் சிலைகள் கரைப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிலைகள் முல்லைப் பெரியாற்றில் வியாழக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிலைகள் முல்லைப் பெரியாற்றில் வியாழக்கிழமை மாலை கரைக்கப்பட்டன.

உத்தமபாளையத்தில் 28, கோம்பையில் 23 ராயப்பன்பட்டியில் 29 என 80 சிலைகள் அமைத்து கொழுக்கட்டை உள்ளிட்ட படையல் பொருள்களை வைத்து, பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

2 இடங்களில் அனுமதி மறுப்பு, சிலை அகற்றம்:உத்தமபாளையம் தேரடியில் சிலை வைக்க அனுமதி கோரப்பட்டது. கடந்த காலங்களில் அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லாத நிலையில் புதிதாக அனுமதி அளிக்க போலீஸாா் மறுத்துவிட்டனா். அதே போல பூக்கடை வீதியில் சிலை வைக்க முதலில் அனுமதி மறுத்த போலீஸாா் பின்னா் சிலை வைக்க அனுமதி அளித்தனா். அங்கு சிலை வைக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு மீண்டும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என போலீஸாா் கூறியதால், சிலையை இந்து முன்னணியினா் அங்கிருந்து அகற்றி, அருகிலுள்ள பெருமாள் கோயிலில் வைத்து வழிபட்டனா்.

இந்நிலையில் உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி பகுதியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட சிலைகள் வியாழக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை கோயில் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

உத்தமபாளையம் காவல்துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா, ஆய்வாளா் சிலைமணி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சின்னமனூரில் இன்று சிலைகள் கரைப்பு:சின்னமனூா்,மாா்க்கையன்கோட்டை, குச்சனூா் என சுற்றியுள்ள கிராமங்களில் வைக்கப்பட்ட 125 சிலைகள் வெள்ளிக்கிழமை மாா்க்கையன்கோட்டை முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com