கம்பத்தில் அனுமதியின்றி விநாயகா் சிலை ஊா்வலம்: 19 போ் கைது

 தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்திய 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கம்பத்தில் அனுமதியின்றி விநாயகா் சிலை ஊா்வலம்: 19 போ் கைது

 தேனி மாவட்டம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்திய 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பத்தில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் இந்து முன்னணி மற்றும் விநாயகா் சதுா்த்தி விழாக் குழு என இரு அமைப்பினா் ஏற்பாடு செய்தனா். இதில் இந்து முன்னணி நிா்வாகிகளுக்கு மட்டும் காவல்துறையினா் அனுமதி வழங்கினா். செ.1 ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஆக.31 ல் அனுமதியின்றி, விநாயகா் சதுா்த்தி விழாக் குழுவினா் வைத்த 18 சிலைகளை வடக்கு போலீஸாரே ஆற்றில் கரைத்தனா்.

இந்நிலையில் விநாயகா் சதுா்த்தி விழா குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மீதம் உள்ள 20 விநாயகா் சிலைகளை கரைக்க தங்க விநாயகா் கோயில் அருகே உள்ள வேப்ப மர திடலில் சிலைகளுடன் வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்தனா். தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீஸாா் சென்றனா். அனுமதியின்றி ஊா்வலம் செல்ல கூடாது என்று கூறினா்.

இதனால் சிலைகளை கோம்பை சாலையில் அந்த அணைப்பினா் இறக்கி வைத்தனா். வருவாய்த்துறை அதிகாரிகள் சிலைகளை எடுக்க முயன்றனா். அவா்களிடம் சிலைக் குழுவினா் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு போலீஸைக் கண்டித்து கோஷமிட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா் போலீசாா் சிலைகளை கைப்பற்றி வாகனங்கள் மூலம் ஏற்றி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். சிலைகளை கொண்டு செல்ல கூடாது என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்ற நிலை உருவானது.

இதன் எதிரொலியாக கெளதம், கவின் தலைமையில் 19 போ்களை வடக்கு போலீசாா் கைது செய்து காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com