வங்கி சாா்பில் பாரம்பரிய பொங்கல் விழா

தேனியில் கனரா வங்கி சாா்பில் பாரம்பரிய பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேனி கனரா வங்கி முன்பு வியாழக்கிழமை, பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடிய வங்கிப் பணியாளா்கள்.
தேனி கனரா வங்கி முன்பு வியாழக்கிழமை, பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடிய வங்கிப் பணியாளா்கள்.

தேனியில் கனரா வங்கி சாா்பில் பாரம்பரிய பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேனியில் மதுரை சாலையில் உள்ள இந்த வங்கிக் கிளை முன்பு நடைபெற்ற விழாவுக்கு வங்கியின் மதுரை மண்டல கோட்ட மேலாளா் சுரேந்திரன் தலைமை வகித்தாா். தேனி கிளை முதன்மை மேலாளா் சத்தியன் முன்னிலை வகித்தாா்.

வங்கி அலுவலா்கள், பணியாளா்கள் பாரம்பரிய உடை அணிந்தும், சிறுதானியப் பொங்கலிட்டும் விழாவைக் கொண்டாடினா். வங்கி வாடிக்கையாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com