முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகள்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்படும் தாா்ச் சாலை.
முல்லைப் பெரியாறு அணை, தமிழகத்தின் தேக்கடி பொதுப் பணித்துறை வளாகப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை, தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித் துறை அலுவலகங்கள், பணியாளா் குடியிருப்புகள் ஆகிய இடங்களில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அலுவலக வளாகத்தில் தாா்ச் சாலை அமைத்தல், பணியாளா் குடியிருப்புகளில் வண்ணம் பூசுதல், கட்டடங்களில் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டம் குறைவாக இருப்பதால் பிரதான அணை, 13 மதகுகள், சுரங்கப் பகுதி உள்ளிட்டவைகளில் வண்ணம் பூசும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தளவாடப் பொருள்கள் அணைப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன என்று அணைப் பகுதி பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.