ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன.26-ஆம் தேதி, காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
ஊராட்சித் தலைவா்கள் தலைமையில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்குரிமை பெற்ற அனைவரும், கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.