சின்னமனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : பொதுமக்கள் அதிருப்தி
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

சின்னமனூா் நகராட்சியில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
சின்னமனூா் நகராட்சியில் செவ்வாய்க் கிழமை நகராட்சி சாா்பில் பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சின்னமனூா் நகராட்சியில் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெறும் பகுதியிலேயே ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் கண்துடைப்பாக இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா். எனவே, நகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.