சின்னமனூரில் ஆழ்துளை கிணறு மூலம்நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணி தீவிரம்
By DIN | Published On : 27th May 2023 01:10 AM | Last Updated : 27th May 2023 01:10 AM | அ+அ அ- |

\
தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆழ்துளை கிணற்றுப் பாசனத்தில் முதல் போகத்துக்கான நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீரால் தேனி மாவட்டத்தில் லோயா் கேம்ப் முதல் பி.சி. பட்டி வரையிலான 14,700 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறும். இந்த நிலையில் ஜூன் மாதத்தில் கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பருவ மழை கேரளத்தில் அதிகமாக பெய்யும் என்பதால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிக்கு நீா் வரத்து ஏற்பட்டு முதல் போக நெல் சாகுபடிக்கு தேவையான பாசன நீா் திறக்கப்படும்.
இதனிடையே ஜூன் மாத தொடக்கத்துக்கு ஒரு சில நாள்களே இருப்பதால் முன்னதாகவே சின்னமனூா் பகுதியில் ஆழ்துளைக் கிணறு மூலம் நாற்றாங்கால் அமைத்து நடவுப் பணிக்கு தேவையான பணியை சில விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.