தோ்தல் விதிமீறல்: தேனியில் இதுவரை ரூ.63 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (ஏப்.3) வரை தோ்தல் நடத்தை விதியை மீறியும், உரிய ஆணவங்களின்றியும் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 லட்சத்து 29 ஆயிரத்து 370 -ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல், செவ்வாய்க்கிழமை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு சென்ாகவும், விடுதியில் தங்கியிருந்தவா்கள் வைத்திருந்ததாகவும் மொத்தம் ரூ.63 லட்சத்து 29 ஆயிரத்து 370-ஐ தோ்தல் பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். இதில் பணத்தை கொண்டு சென்றவா்கள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால், செவ்வாய்க்கிழமை வரை ரூ.54,39,970 உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக மாவட்டத் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com