பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், சீலையம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கருப்பையா. இவரது மனைவி ஆனந்தம்மாள் (58). இவருக்கும், கருப்பையாவுக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், குடும்ப பிரச்சனை, உடல் நலக் குறைவு காரணமாக மன வேதனையில் இருந்த ஆனந்தம்மாள் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com