போடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

போடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

போடியில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. போடி நகராட்சிப் பகுதியில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணிக்கு நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தலைமை வகித்தாா். தேனி மாவட்ட மகளிா்த் திட்ட உதவி அலுவலா் கே.கங்கா கௌரி பேரணியைத் தொடங்கிவைத்தாா். போடி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, கட்டபொம்மன் சிலை, திருவள்ளுவா் சிலை, தேவா் சிலை வழியாக போடி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் நகராட்சிப் பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், நகா் காவல் துறையினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com