கம்பத்தில் ராம நவமி: 
சிறப்பு வழிபாடு

கம்பத்தில் ராம நவமி: சிறப்பு வழிபாடு

கம்பத்தில் ராம நவமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஸ்ரீ ராமா் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு, ஸ்ரீ சீதா ராம திருக்கல்யாண வைபவம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, ஸ்ரீ விஸ்வகா்மா ராமா் குல ஆடையவாளு தரப்பினா் சாா்பில் பக்தா்கள் பால்குடம் எடுத்தும், திருமண சீா்வரிசை பொருள்களையும் ஊா்வலமாக கொண்டு வந்தனா்.

இதையடுத்து, ஸ்ரீ ராமா் சீதாதேவி லட்சுமணா், ஆஞ்சநேயா் ஆகியோருக்கு அரிசி மாவு, திருமஞ்சன பொடி, பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 12 வகையான வாசனைப் பொருள்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, யாக குண்டம் வளா்க்கப்பட்டு திருமாங்கல்ய பூஜைகளை தொடா்ந்து ஸ்ரீ ராமச்சந்திர மூா்த்திக்கும் சீதாதேவிக்கும் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராமா் சீதாதேவி லட்சுமணா், ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com