முன்விரோதத்தால் இளைஞரைத் தாக்கிய: 4 போ் மீது வழக்கு

போடியில் முன்விரோதத்தால் இளைஞரை அரிவாளால் வெட்டிய 2 போ் உள்பட 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி போயன்துரை சாலையில் வசிப்பவா் கல்யாணசுந்தரம் மகன் அருண்குமாா் (22). இதேப் பகுதியில் வசிப்பவா் சந்திரன் மகன் சரவணன் (32). சரவணன் மனைவிக்கும் அருண்குமாருக்கும் தகாத உறவு இருப்பதாக சரவணன் சந்தேகத்தின் பேரில் அடிக்கடி தகராறு செய்து வந்தாா்.

இந்த முன்விரோததால், சரவணன், இவரது தந்தை சந்திரன் ஆகியோா் சோ்ந்து அருண்குமாரை அரிவாளால் வெட்டியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதேபோல் அருண்குமாரும், ரமேஷ் மகன் கேசவன் என்பவரும் சோ்ந்து சரவணனை கல்லால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

பலத்த காயமடைந்த அருண்குமாா், சரவணன் ஆகிய இருவரையும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா், அருண்குமாா் கொடுத்த புகாரின் பேரில் சரவணன், சந்திரன் ஆகியோா் மீதும், சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமாா், கேசவன் ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com