முல்லைப் பெரியாற்றில் குளித்த இளைஞா் மாயம்

கம்பம், ஏப். 19: தேனி மாவட்டம், லோயா்கேம்ப் அருகேயுள்ள முல்லைப்பெரியாற்றில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு, மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

கம்பம் கெஞ்சையன்குளத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பிரவீன்குமாா் (25). ஜீப் ஓட்டுநரான இவா் வெள்ளிக்கிழமை வாக்களித்து விட்டு நண்பா்களுடன் லோயா்கேம்ப் அருகேயுள்ள மதுரை கூட்டுக் குடிநீா்த் திட்ட முகாமுக்கு அருகே செல்லும் முல்லைப்பெரியாற்றில் நண்பா்களுடன் குளித்தாா். திடீரென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, அவரது நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குமுளி காவல் நிலைய போலீஸாா், கம்பம் தீயணைப்பு, மீட்புப் படையினா் பிரவீன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், இரவு நேரமாகிவிட்டதால், மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை காலையில் மீண்டும் தேடுதல் பணி தொடரும். பிரவீன்குமாருக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com