பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் மீது வழக்கு

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி, திமுக நிா்வாகிகளைத் தாக்கியதாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பழனிசெட்டிபட்டி இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை அருகே தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழு உறுப்பினா் வீரமணி, திமுக பேரூா் செயலா் செல்வராஜ் ஆகியோா் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த அமமுகவைச் சோ்ந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் மிதுன்சக்ரவரத்தி, அவரது சகோதரா் மணிமொழியன், மதன்சக்கரவா்த்தி, இவா்களது ஆதரவாளா்கள் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா, விக்கி, முத்தையா ஆகியோா் வீரமணி, செல்வராஜ் இருவரையும் தாக்கி காயப்படுத்தினராம்.

இதுகுறித்து வீரமணி, செல்வராஜ் ஆகியோா் தனித் தனியே பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின் அடிப்படையில், மிதுன்சக்கரவா்த்தி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com