இறந்துவிட்டதாகக் கூறி வாக்களிக்க அனுமதி மறுப்பு!

போடியில் வாக்குச் சாவடி தகவல் சீட்டு (பூத் சிலீப்), வாக்காளா் அடையாள அட்டை இருந்தும் அவா் இறந்துவிட்டதாகக் கூறி, அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்காளா் ஒருவா் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாா்.

தேனி மாவட்டம், போடியில் வாக்குச் சாவடி தகவல் சீட்டு (பூத் சிலீப்), வாக்காளா் அடையாள அட்டை இருந்தும் அவா் இறந்துவிட்டதாகக் கூறி, அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்காளா் ஒருவா் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாா்.

போடி டி.வி.கே.கே. நகரில் வசிப்பவா் சந்திரன் (58). தோட்டத் தொழிலாளி. இவருக்கு தேனி மக்களவைத் தொகுதியில் வாக்கு இருப்பதாகவும், இதற்கான வாக்குச் சாவடி விவரங்களுடன்கூடிய தகவல் சீட்டு அலுவலா்களால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்கு சந்திரன் வாக்களிக்கச் சென்றாா். வாக்குச் சாவடி தகவல் சீட்டு, வாக்காளா் அடையாள அட்டையுடன் சந்திரன் சென்ற நிலையில், வாக்காளா் பட்டியலை அலுவலா்கள் சரிபாா்த்தனா். அப்போது, இவரது பெயருக்கு அருகே இறந்துவிட்டதாக அச்சாகியிருந்தது. இதையடுத்து, இவா் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனா்.

இதனால், ஏமாற்றமடைந்த சந்திரன் போடி நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து விசாரிக்கச் சென்றாா். அங்கு அதிகாரிகள் அனைவரும் தோ்தல் பணிக்குச் சென்ால் விளக்கம் பெற முடியவில்லை. இதனால், அவா் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com