கம்பம் இலாஹி அரபிக் பள்ளியில் 
மாதிரி வாக்குச்சாவடி மையம்

கம்பம் இலாஹி அரபிக் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம்

பம்தேனி மாவட்டம், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது.

பம்தேனி மாவட்டம், கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது.

கம்பம் நகராட்சிப் பகுதியில் 64 ஆயிரத்து 344 வாக்காளா்கள் வாக்கு செலுத்தும் வகையில், 16 மையங்களில் 63 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் தொடக்கப் பள்ளியில் மாதிரி வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டது.

இங்கு வாக்காளா்களை வரவேற்கும் விதமாக வரவேற்பாளா்கள், சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. மேலும், வெயில் தாக்கத்தை குறைக்கும் விதமாக சாமியான பந்தல், வாக்காளா்களுக்கு இருக்கை வசதிகள், கண்காணிப்பு கேமரா, குடிநீா், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த மாதிரி வாக்குச் சாவடி மையம் வாக்காளா்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com