தேனி மக்களவைத் தொகுதி 
திமுக வேட்பாளா் வாக்குப் பதிவு

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்குப் பதிவு

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்செல்வன் அவரது சொந்த ஊரான நாராயணத்தேவன்பட்டியில் உள்ள அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்களித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தத் தோ்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். நான் வெற்றி பெற்றால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடி உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். பேபி அணை பலப்படுத்தப்படும். திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை லோயா்கேம்ப் வரை அமைக்கப்படும். உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, போடி ஆகிய இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றாா் அவா்.

இயந்திரம் பழுது:

கம்பம் ஊராட்சி ஒன்றியம், நாராயணத்தேவன்பட்டியில் உள்ள அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாகம் எண் 267-க்கான வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால், வாக்குப் பதிவு சுமாா் 15 நிமிஷம் தாமதமானது. பின்னா், தொழில்நுட்ப ஊழியா்கள் பழுதை சரி செய்ததையடுத்து, வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்களித்த முக்கிய பிரமுகா்கள்

கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்டச் செயலருமான என்.ராமகிருஷ்ணன் உழவா் சந்தை மேற்கு வாசல் அருகேயுள்ள அரசு கள்ளா் ஆரம்ப பள்ளியிலும், முன்னாள் மக்களவை உறுப்பினரும், முன்னாள் தில்லி சிறப்பு பிரதிநிதியுமான பெ.செல்வேந்திரன் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், கம்பம் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் உத்தமபுரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியிலும், கூடலூா் நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகந்துரை ராஜாங்கம் நினைவு அரசினா் கள்ளா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com