கம்பம், பெரியகுளத்தில் வாக்குப் பதிவு குறைவு

கம்பம், பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகளில் குறைந்த அளவில் முறையே 66.87 சதவீதம், 66.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கம்பம், பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகளில் குறைந்த அளவில் முறையே 66.87 சதவீதம், 66.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தேனி மக்களவைத் தொகுதி தோ்தலில் மொத்தம் 69.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், அதிகளவில் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சோழவந்தான் (தனி) தொகுதியில் 74.98 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. உசிலம்பட்டி சட்டப் பேரவை தொகுதியில் 70.95 சதவீதம், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் 70.82 சதவீதம், போடி சட்டப் பேரவைத் தொகுதியில் 71.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

குறைந்த அளவாக கம்பம் சட்டப் பேரவை தொகுதியில் 66.60 சதவீதமும், பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் 66.01 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. தேனி மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்களில் 69.23 சதவீதம் பேரும், பெண் வாக்காளா்களில் 70.50 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com