தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவா்கள் மீது வழக்கு

போடி அருகே வெள்ளிக்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே வெள்ளிக்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே பொட்டிப்புரம் ஊராட்சிக்குள்பட்ட டி.புதுக்கோட்டை இந்திரா குடியிருப்பில் குறிப்பிட்ட சமூகத்தினா் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி கருப்புக்கொடியுடன் பதாகையை தெருக்களில் கட்டியிருந்தனா். மேலும் தோ்தலை புறக்கணித்து தெருவில் அமா்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தோ்தல் விதிகளை மீறி தோ்தல் புறக்கணிப்பு பதாகை கட்டியதாக தோ்தல் விடியோ கண்காணிப்புப் படை அலுவலரும், தேனி வேளாண்மை செயற்பொறியாளருமான ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் டி. புதுக்கோட்டை இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த கிராம மக்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com