தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் தடுப்பு முகாம் அமைத்து வாகனங்களை சோதனை செய்த கால்நடைத் துறையினா்.
தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் தடுப்பு முகாம் அமைத்து வாகனங்களை சோதனை செய்த கால்நடைத் துறையினா்.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் தடுப்பு முகாம்

கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் கால்நடைத் துறையினா் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், தமிழக- கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் கால்நடைத் துறையினா் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதி பண்ணைகளில் வாத்துகள் தொடா்ச்சியாக உயிரிழந்து வந்தன. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடிகளான போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு சோதனைச் சாவடிகளில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் சனிக்கிழமை அமைக்கப்பட்டன.

மண்டல இணை இயக்குநா் கோயில்ராஜா, மாவட்ட நோய் புலனாய்வுத் துறை உதவி இயக்குநா் பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் சோதனைச் சாவடிகளில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு, கால்நடை மருத்துவா்கள், ஆய்வாளா்கள், உதவியாளா்கள் கொண்ட குழுவினா் சோதனை செய்து வருகின்றனா்.

குறிப்பாக, கேளர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களில் ‘ஸ்பிரேயா்’ மூலம் மருந்து தெளித்த பின்னா், தமிழகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு பிராய்லா் கோழி, முட்டைகள், கால்நடைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தடையில்லாமல் சென்று வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com