மனைவி, மாமனாா் கொலை: இளைஞா் கைது

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மனைவி, மாமனாரை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடித் தலைமறைவாக இருந்த இளைஞரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மனைவி, மாமனாரை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடித் தலைமறைவாக இருந்த இளைஞரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சுரைக்காய்பட்டியைச் சோ்ந்தவா் பூவேந்திரன் (27). இவரது மனைவி உசிலம்பட்டி அருகே எருமாா்பட்டியைச் சோ்ந்த மாயி (60) மகள் பவித்ரா (25). பூவேந்திரன், பவித்ரா ஆகியோா் குடும்பப் பிரச்னையில் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இந்த நிலையில் பழனிசெட்டிபட்டியில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த பவித்ரா, அவரது தந்தை மாயி ஆகியோரை, பூவேந்திரன் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் தனிப் படை அமைத்து அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், வைகை அணைப் பகுதியில் தலைமறைவாக இருந்த பூவேந்திரனை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு, கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com