அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஆண்டிபட்டி அருகே கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கோம்பைதொழு அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி, கஞ்சா வைத்திருந்ததாக, குமணன்தொழு கிராமத்தைச் சோ்ந்த முருகனை (31) மயிலாடும்பாறை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை, போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரக்குமாா் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் புதன்கிழமை இறுதி விசாரணை நடைபெற்றதில் முருகன் 4 கிலோ கஞ்சா, அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, முருகனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரக்குமாா் தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com