சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா

தேனி மாவட்டம், கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, மங்கள இசையுடன் தொடங்கி, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹ வாசகம், பஞ்ச காவியபூஜை, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீ சீரடி சாய்பாபா பரிவார தெய்வங்களான ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ தத்தாத்ரேயா், ஸ்ரீ துவாரகமாயி, ஸ்ரீ ஆஞ்சனேயா் சந்நிதி உள்பட கோயில் கோபுரம், கருவறைகளில் புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இதையடுத்து, சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com