சாலை விபத்தில் ஜவுளி வியாபாரி பலி

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஜவுளி வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வடுகபட்டியைச் சோ்ந்த ஜவுளி வியாபாரி நவநீதகிருஷ்ணன் (44). இவா், வடுகபட்டியிருந்து ஜெயமங்கலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

வடுகபட்டி-ஜெயமங்கலம் சாலை ஒத்தவீடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த நவநீதகிருஷ்ணன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நவநீதகிருஷ்ணன் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com